Friday, May 05, 2006

புது கிரக கண்டு பிடிப்பு - ஜோதிடத்தின் பலன் மாறாது -ஏன்

ஜோதிடம் உண்மையா பொய்யா என்பது தனி விவாதம்.

வாஸ்து சோதிடம் என்று எந்த ஒரு கலையையும் அழிக்க வேண்டாம்.

இன்று நமக்கு புரியவில்லை என்பதாலோ அல்லது ஏமாற்றும் எத்தர் அதிகம்

இருப்பதாலோ அதை முழுமையாய் உணரும் வரை அதை அழிக்காமல்

பாதுகாப்போம்.

ஜோதிடம் உண்மையா பொய்யா என்பது தனி விவாதம். ஆனால் அதன்

கணித முறையில் பிழை இல்லை. இன்னும் எத்தனை கோள்கள் கண்டு

பிடிக்கபட்டாலும் அது சூரியனை சுற்றும் காலத்தை கொண்டே அதன்

பலாபலன் கணிக்கப்படுகிறது. ஒரு சராசரி மானிட வயதுக்குள் சூரியனை

ஒரு முழு சுற்று சுற்றிவரும் கிரகங்கள்தான் மனித வாழ்க்கையில் மாறுதல்

ஏற்படுத்தும் என்பது கணக்கு. உதாரணம் சனி (30 வருடத்திற்கு

ஒருமுறை) வியாழன் (12 வருடத்திற்கு ஒருமுறை).


1. ஜாதகக்கணிப்பில் சந்திரனுக்கு ஒரு முக்கிய இடம்

கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரன் மற்ற கோள்கள் போலன்றி அது

ஒரு துணைக்கோளாக இருக்கும்போதும் எப்படி அதுவும் ஒரு கோளாக

எடுத்துக்கொள்ளப்படுகிறது?

ஜாதகத்தை பொருத்த வரை அதில் உள்ள கோள் என்று சொல்லப்படுவது

Planet என்னும் பொருளில் எடுக்கவேண்டாம். அது தரும் பலன்

பொருத்தே அதில் சேர்க்கபட்டுள்ளது. நீங்கள் அரசியல் பொருளாதார

தன்மை நிலைபெற்ற நாட்டில் வசித்தாலும் உங்கள் பக்கத்து வீட்டுக்கரானோ

அல்லது உங்கள் தெருவையே சுற்றி வரும் ஒரு சமூகசேவகராலோ அல்லது

ஒரு ரெளடி
யாலோ நீங்கள் இன்பமோ துன்பமோ அடையலாம் அல்லவா அது

போலத்தான் சந்திரனின் பலனும்.

ஆனால் புளுட்டோ போன்ற தூரத்து கிரகங்கள் ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு

வரை ஒரே கட்டத்தில் இருப்பதால் அதன் பலன் நிரந்தரம் மாறாதது.

அதைப்பற்றி யோசித்து பலன் இல்லை.


தூரக்கணக்கை எடுப்பதில்லை சூரியனை சுற்றும் காலத்தையே

எடுதுக்கொள்கின்றனர். மேலும் சந்திரன் 28 நாளுக்கு ஒரு முறை பூமியை

சுற்றிவருவதால் அதன் நிலைப்பாடு தினப்பலன் கூறுவதற்கும் சூரியன்

ஒவ்வொரு ராசியின் பார்வையிலிருந்து மாதம் ஒரு முறைதான் இடம்

மாறுவதால் அதை மாத பலன் கூறுவதற்கும் உபயோகபடுத்துகிறார்கள்.

நான் ஜோசியத்தின் தரம் பற்றி விவாதிக்க வில்லை. ஆனால் நமக்கு

புரியாத அல்லது விளக்க முடியாத எல்லாமே ஏமாற்று வேலை என்பது

தவறான அணுகுமுறை.

சமீபத்தில் டோண்டு அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி பற்றி தமிழ் மணத்தில்

வந்ததால் இதையும் கூறுகிறேன். 60 என்பது வியாழன் சனி கிரகங்கள்

சூரியனை சுற்றி வரும் வருடங்களின் 12, 30 (LCM) 60. என்

கணக்குப்படி 58ம் வருடமோ அல்லது 59ம் வருடமோ ஒரு குறிப்பிட்ட

நாளில் கணிக்கப்படும் ஜாதக்ம் அவர் பிறந்த போது இருந்த ஜாதகத்துடன்

ஒத்துபோகும் என்று நினைக்கிறேன். இது ஒரு home coming போல.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு எதிர் விளைவு உண்டு. நான் முன்

குறிப்பிட்ட ஒரு ரெளடியின் தொந்தரவை ச்மாளிக்க நீங்கள் ஒரு போலீசின்

துணை நாடலாம் அல்லது வேறு இடத்திற்கு குடி பெயரலாம்.

7 comments:

குமரன் (Kumaran) said...

நன்றாய் விளக்கினீர்கள் சூப்பர் சுப்ரா. மிக்க நன்றி. நீங்கள் சொன்னது போல் நமக்கு ஒன்று புரியாததால் அது தவறென்றோ, ஒன்றை மற்றொன்றாய்ப் புரிந்து கொண்டு மற்றவர் திருந்தமாட்டேன் என்கிறார்கள் என்று சொல்வதோ தவறு. அந்தத் தவறை இந்த விடயத்தில் நான் செய்யாவிட்டாலும் வேறெங்காவது செய்திருப்பேன். இனிமேல் கவனமாய் இருக்கவேண்டும்.

Muthu said...

சூப்பர் சுப்ரா,
சனி வரையுள்ள கோள்களைப் பலன் சொல்ல ஏன் எடுத்திருக்கிறார்கள் என நீங்கள் சொன்ன விளக்கம் அருமை. ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. இது உங்களின் சொந்தக் கருத்தா அல்லது ஏதாவது சோதிடப்புத்தகத்தில் படித்ததா என்றும் தெரிந்து கொள்ள ஆசை.

"அறுபதாண்டு நிறைவு விழா" பற்றி எனது தனிப்பட்ட கருத்து இதுதான். அந்த அறுபது வருடத்தில் சனி அனைத்து ராசிகளையும் இரு சுற்று சுற்றிவந்து பிறக்கும்போதிருந்த ராசியில் வந்து நிற்கும். நள வருடம் தை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஒருவர் மீண்டும் தை திருவதிரையில் பிறந்த நாள் கொண்டாடலாம், ஒவ்வோர் ஆண்டும் அதைக் கொண்டாட இயலும். இன்னும் கொஞ்சம் விஷேசமாய்க் கொண்டாட அவர் நள வருடம் தை திருவாதிரை வரை அதாவது 60 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அப்போது மீண்டும் அதே வருடம், அதே மாதம், அதே நட்சத்திரம் என அப்படியே வருகிறதல்லவா அதுதான் விஷேசமென நினைக்கிறேன். ஆனால் இது 60, 120 போன்ற வயதில் மட்டுமே நடக்கும். 120 வருடங்கள் என்ற பூரண ஆயுளை வாழ்ந்து கழித்த யாரும் எனக்கு நினைவில்லை. :-).

Geetha Sambasivam said...

நீங்கள் கூறி இருப்பது மிகவும் நல்ல கருத்து ஆகும். ஆனால் அறிவியல் பூர்வமாக எதையும் பார்ப்பவர்களுக்கு ஏற்க முடியாது.என் வாழ்விலே ஜோசியத்தில் சொன்னது எத்தனையோ நடந்திருக்கிறது.

Thekkikattan|தெகா said...

ஹீம்...சுப்ரா, நன்றாக எழுதப் பட்டிருகிறது.

உங்களுக்காக ஒரு முக்கியமான கேள்வி "புதைக்கிறதா இல்லெ எரிக்கிறதா" பதிவில் காத்துக் கொண்டுள்ளது.

உங்களுக்கு மிகவும் பிடித்த கேள்விதான், கொஞ்சம் சிந்தனையூட்டும் விதத்தில் அமைந்திருக்கும்.

என்னுடன் உங்களின் பார்வையை அங்கு வந்து பகிர்ந்து கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்,

தெகா.

Anonymous said...

இறைத்துவிட்டது போல் தோன்றுகிற விண்மீன்களை ஆராய்ந்த பின் கண்டறிந்தான்,அவற்றில் கிரங்கங்கள் என்பவை நம் பூமியை போன்றவை ஒன்பது என. மேலும் அருகில் தொலைநோக்கி கொண்டு அவைகளின் நிறங்களை கண்டறிந்தான்.அந்த நிறங்கள் இவைகளே
Mercury-Grey
Venus -Blue white
Earth -Blue
Mars -Orange
Jupiter-Yellow
Saturn -Reddish Brown
Uranus -Green
Neptune-Powder Blue
Pluto -White
இதில் mercury நிறமற்ற கருமை என்றும்,pluto அனைத்து நிறங்களை உள்ளடக்கிய வெள்ளை என்றும் அவைகளை தவிர்த்த பிற ஏழு கிரகங்களை அடிப்படை நிறங்களான VIBGYORருடன்(violet,indigo,blue,green,yellow,orange,red )ஒப்பீடு செய்தால் வருவதும் அதுவே..

Venus-Blue white (V)
Neptune-Powderblue (I)
Earth-Blue (B)
Uranus-Green (G)
Jupitor (Y)
Mars (O)
Saturn (R)
நிறங்கள் என்பதே அதற்கேற்ற அலைவரிசை/அதிர்வுகள் கொண்டவை.அப்படியானால் வெவ்வேறு கிரகங்கள் வெவ்வேறு அதிர்வுகள் கொண்டவை எனலாமா!
ஆராய்ந்து அறிந்தது விஞ்ஞானம் என்றால் அதிர்வுகளை அறிந்தது மெய்ஞ்ஞானம் எனலாமா!நிற்க

இந்த அண்டத்தில் அனைத்தும் ஒரு விதியினை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது.அதில் தோன்றி வாழும் மனிதர்களும் இறைத்துவிட்ட விண்மீன்களை போன்று இருந்தாலும் அவனும் விதிவிலக்கல்ல.
நிறமற்ற கருமை போன்று அந்த விதியினை அறிந்து கொள்ளாமலே போகின்ற விதி ஒன்று என்றால்,அனைத்தையும் உள்ளடக்கிய வெண்மை போன்று அந்த விதியினை அறிந்து கொள்கிற விதி மற்றொன்று,இரண்டிற்கும் இடைப்பட்ட நிறங்கள் போன்ற விதி மூன்று எனலாம்.
அதாவது (ஜோதிடத்தால்) தீர்மானிக்கப்பட்ட விதியினை கொண்ட இரண்டு பகுதி மனிதர்கள்.தீர்மானிக்கபட முடியாத விதியினை கொண்ட ஒரு பகுதி மனிதர்கள் ஆக மூன்று.
அல்லது இப்படியாகவும் கூறாலாம்........
நீங்கள் மூன்றாக பிரிக்கப்படுவீர்கள்-குர் ஆன்
இயேசும் அவரோடு அறையப்பட்ட இரண்டு நபர்கள் ஆக மூன்று-பைபிள்

மனிதனின் குணங்கள் மூன்று சாத்வீகம், ரஜஸ், தமஸ்-இந்து

ஜெனிட்டிக்கல் விஞ்ஞான ரீதியாக ஜீன் அடிப்படையில் கூறும் மனித இனம்(M130,M89,M9) எனும் மூன்று.

Joe said...

ஏதோ சொல்ல வர்றீங்க, என்ன சொல்ல வர்றீங்கன்னு தான் புரியல.

இல்ல புரிஞ்சுக்க நான் முயற்சி பண்ணல போல! ;-)

செங்கோல் said...

நல்லாத்தன போச்சி,ஏன் தொடர்ந்து இந்த ப்ளாக்க எழுதல?