Friday, May 05, 2006

புது கிரக கண்டு பிடிப்பு - ஜோதிடத்தின் பலன் மாறாது -ஏன்

ஜோதிடம் உண்மையா பொய்யா என்பது தனி விவாதம்.

வாஸ்து சோதிடம் என்று எந்த ஒரு கலையையும் அழிக்க வேண்டாம்.

இன்று நமக்கு புரியவில்லை என்பதாலோ அல்லது ஏமாற்றும் எத்தர் அதிகம்

இருப்பதாலோ அதை முழுமையாய் உணரும் வரை அதை அழிக்காமல்

பாதுகாப்போம்.

ஜோதிடம் உண்மையா பொய்யா என்பது தனி விவாதம். ஆனால் அதன்

கணித முறையில் பிழை இல்லை. இன்னும் எத்தனை கோள்கள் கண்டு

பிடிக்கபட்டாலும் அது சூரியனை சுற்றும் காலத்தை கொண்டே அதன்

பலாபலன் கணிக்கப்படுகிறது. ஒரு சராசரி மானிட வயதுக்குள் சூரியனை

ஒரு முழு சுற்று சுற்றிவரும் கிரகங்கள்தான் மனித வாழ்க்கையில் மாறுதல்

ஏற்படுத்தும் என்பது கணக்கு. உதாரணம் சனி (30 வருடத்திற்கு

ஒருமுறை) வியாழன் (12 வருடத்திற்கு ஒருமுறை).


1. ஜாதகக்கணிப்பில் சந்திரனுக்கு ஒரு முக்கிய இடம்

கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரன் மற்ற கோள்கள் போலன்றி அது

ஒரு துணைக்கோளாக இருக்கும்போதும் எப்படி அதுவும் ஒரு கோளாக

எடுத்துக்கொள்ளப்படுகிறது?

ஜாதகத்தை பொருத்த வரை அதில் உள்ள கோள் என்று சொல்லப்படுவது

Planet என்னும் பொருளில் எடுக்கவேண்டாம். அது தரும் பலன்

பொருத்தே அதில் சேர்க்கபட்டுள்ளது. நீங்கள் அரசியல் பொருளாதார

தன்மை நிலைபெற்ற நாட்டில் வசித்தாலும் உங்கள் பக்கத்து வீட்டுக்கரானோ

அல்லது உங்கள் தெருவையே சுற்றி வரும் ஒரு சமூகசேவகராலோ அல்லது

ஒரு ரெளடி
யாலோ நீங்கள் இன்பமோ துன்பமோ அடையலாம் அல்லவா அது

போலத்தான் சந்திரனின் பலனும்.

ஆனால் புளுட்டோ போன்ற தூரத்து கிரகங்கள் ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு

வரை ஒரே கட்டத்தில் இருப்பதால் அதன் பலன் நிரந்தரம் மாறாதது.

அதைப்பற்றி யோசித்து பலன் இல்லை.


தூரக்கணக்கை எடுப்பதில்லை சூரியனை சுற்றும் காலத்தையே

எடுதுக்கொள்கின்றனர். மேலும் சந்திரன் 28 நாளுக்கு ஒரு முறை பூமியை

சுற்றிவருவதால் அதன் நிலைப்பாடு தினப்பலன் கூறுவதற்கும் சூரியன்

ஒவ்வொரு ராசியின் பார்வையிலிருந்து மாதம் ஒரு முறைதான் இடம்

மாறுவதால் அதை மாத பலன் கூறுவதற்கும் உபயோகபடுத்துகிறார்கள்.

நான் ஜோசியத்தின் தரம் பற்றி விவாதிக்க வில்லை. ஆனால் நமக்கு

புரியாத அல்லது விளக்க முடியாத எல்லாமே ஏமாற்று வேலை என்பது

தவறான அணுகுமுறை.

சமீபத்தில் டோண்டு அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி பற்றி தமிழ் மணத்தில்

வந்ததால் இதையும் கூறுகிறேன். 60 என்பது வியாழன் சனி கிரகங்கள்

சூரியனை சுற்றி வரும் வருடங்களின் 12, 30 (LCM) 60. என்

கணக்குப்படி 58ம் வருடமோ அல்லது 59ம் வருடமோ ஒரு குறிப்பிட்ட

நாளில் கணிக்கப்படும் ஜாதக்ம் அவர் பிறந்த போது இருந்த ஜாதகத்துடன்

ஒத்துபோகும் என்று நினைக்கிறேன். இது ஒரு home coming போல.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு எதிர் விளைவு உண்டு. நான் முன்

குறிப்பிட்ட ஒரு ரெளடியின் தொந்தரவை ச்மாளிக்க நீங்கள் ஒரு போலீசின்

துணை நாடலாம் அல்லது வேறு இடத்திற்கு குடி பெயரலாம்.