Sunday, March 05, 2006

ஜாதகம் - (பிறப்பேடு) என்பது என்ன

ஜாதகம் என்பது ஒருவரின் பிறந்த தேதி பற்றிய விவரக்குறிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை வெறும் சொற்களாலேயே குறிப்பிட முடியுமே அதற்கு எதற்காக ஒரு வரைபடம் அதில் கிரகங்களின் நிலை போன்ற விவரம்? உண்மையில் வரைபடமே மிகவும் முக்கியமானது. காலண்டர் எனும் நாட்காட்டி மனித சரித்திரத்தில் எத்தனையோ முறை மாற்றபட்டிருக்கிறது. உலகில் எத்தனையோ காலண்டர்கள் உள்ளன.ஆனால் ஜாதக வரைபடம் கிரக நிலைகளை பிறந்த ஊர், நேரம், இடம் இவற்றைச்சார்ந்த தாக எழுதப்படுகிறது. அதனால் எத்தனை ஆயிரம் வருடம் ஆனாலும் ஒருவரின் ஜாதக வரைபடம் மட்டும் இருந்தால் போதும். அவர் எத்தனை ஆண்டுகள் முன் பிறந்தார் எங்கு பிறந்தார் என்ன நேரத்தில் பிறந்தார் என்பதை எள்ளளவும் பிழையின்றி கண்டுபிடிக்க முடியும். இப்படி ஓர் அற்புதமான முறையைக் கண்டு பிடித்த முன்னோர்களின் அறிவைப்பாராட்டுவோம்.

சோதிடம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால் ஜாதகம் என்பது Carbon Dating போல ஒரு அறிவியல் அற்புதம்

4 comments:

Geetha Sambasivam said...

I read in Selvan's blog about your explanation of Rama Nama. It is simply superb and correct. About the test tube baby ,you said the Kouravas are the first. But to my knowledge I came to know Agasthiyar was the first test tube. He came from a vessel(kudam).

தருமி said...

carbon dating...........is it a bit far fetched..?

Murugadoss - R said...

Dear,
Jathgam enbathu oru Science Miracle illai. Athu ondana kalathil earth center kolgai, athavthu BUMI naduvilum matra kolgal athai sutruvathagavum (Suriyan utpada) nambapatta kallathil uruvakkapatathu. Indrum BUMI miya kolgaithan payan paduthapattu varukirathu. Aga athu oru Kuppai Kanakku. Science unnmai ennavenral suriyan maiyathil ullathu matra kolgalthan athai sutrukirathu.(BUMI utpada). Please Open your Wisdom and rearch it...

supersubra said...

Even சூரியன் தான் மையம் என்பது நம் முன்னோர்களுக்கு தெரியாததல்ல. ஆனால் பூமியின் பார்வையில் இருந்து கணக்கெடுக்கும் பொழுது இப்படி ஒரு முறை தேவை படுகிறது. பின்னொரு காலத்தில் செவ்வாய் அல்லது வேறு கிரகத்தில் மனிதன் குடியேறிய பிறகு அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் ஜாதகத்தில் பூமியும் ஒரு கிரகமாகவும் அந்த கிரகத்தை சுற்றி வரும் சிறிய துணைக்கோள்கள் சந்திரனாகவும் கணிக்கப்படும்.

நான் சொல்ல வந்தது என்ன என்றால் இப்பொழுது நடைமுறையில் இருக்கும் சக ஆண்டு கிறிஸ்துவ ஆண்டு அல்லது வேறு நாட்காட்டி முறைகள் மாறினாலும் ஜாதகத்தின் துணையுடன் உண்மையான பிறந்த நாளை கணிக்க முடியும் என்பதுதான்.

நம்மால் புரிந்து கொள்ள முடியாதது எல்லாம் குப்பை என்றால் நாமும் கூட குப்பைதான் பிறர் பார்வையில்