ஆண்டவன்
பிறப்பில் வருவது யாதெனக்கேட்டென்
பிறந்து பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக்கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
வாழ்வில் வருவது யாதெனக்கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தேதான் வாழ்வது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.
- கண்ணதாசன்
Saturday, June 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
இந்த கண்ணதாசனின் வரிகள் எனக்கு மிகப் பிடித்த ஒன்று. தங்கள் வலைப்பூவில் இட்டமைக்கு நன்றி.
Aahha enna inimayana anubavangal.Miga nantraga ullathu.Mikka nantri
Ramanathan
Post a Comment