Friday, March 31, 2006

மறு பிறவி பற்றி என்னுடைய கருத்து

முழு பிரபஞ்ச ஆன்மாக்களும் சேர்ந்த ஒரு பரமாத்மாவை ஒரு பெரிய கடலுக்கு ஒப்பிடுவோம். அதிலிருந்து ஒரு பாத்திரம் (உடல்) மூலம் சிறிது நீர் எடுப்போம் (பிறவி). பின் அந்த பிறவியின் கர்மத்தை பொருத்து அந்த நீரின் நிறம் (ஆன்மாவின் வாசனை) மாறுகிறது. இப்பொழுது அந்த நீரை மீண்டும் அந்த பரமாத்மாவான கடலில் கொட்டுவோம் (இறந்து படுவோம்). இப்பொழுது அந்த பாத்திரத்தின் நீர் அந்த பரமாத்மாவின் தன்மையுடன் ஒன்றி விடுகிறது. (ஆனால் அது ஒன்றும் முன்னால்) ஒரு சிறிய பாத்திரத்தில் உள்ள சிவப்பு நிற திரவத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள தெளிந்த நீரின் மேல் கொட்டுவோம். அந்த கொட்டிய நீர் கலக்கும் முன்னால் வெகு வேகமாக அது வீழ்ந்த இடத்தில் இருக்கும் நீரை வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் (புது உடலில்) பிடித்தால் அந்த நீர் ஓரளவு பழைய சிவப்பு நிறத்தின் சாயல் இருக்கும். அது போல்தான் மறு பிறப்பு என்பது என் எண்ணம். இறந்த உடனடியாக மறு பிறப்பெடுத்தால் முன்பிறவி வாசனை இருக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிது காலம் கழித்து பிறந்தால் அது மற்றும் ஒரு புதிய பிறவி எனக் கொள்ளாமே தவிர அது மறுபிறப்பாகாது. மேலும் அந்தபிறவி பல்வேறு பிறவிகளின் ஒரு கலவையான பிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.

No comments: