Saturday, September 03, 2005

கடவுளிடம் கேட்ட வரம்

கடவுளிடம்


அறிவைக்கேட்டேன்அவிழ்ப்பதற்கு வாழ்க்கையில் புதிர்களை தந்தார்.

வாழ்வில் மகிழ்ச்சியைக் கேட்டேன்என்னிலும் அல்லலுறும் மனிதர்களைக் காண்பித்தார்.


சொத்துக்களைக் கேட்டேன்சோர்வின்றி உழைக்கச் சொன்னார்

வரங்கள் கேட்டேன்வாய்ப்புக்கள் தந்தார்

அமைதி கேட்டேன்அடுத்தவர்க்கு உதவும் வழிகளை காட்டினார்.



நான் கேட்ட எதுவும் கடவுள் கொடுக்கவில்லை
ஆனால்நான் தேடிய அனைத்தும் எனக்கு கிடைத்தது.

விவேகானந்தர்

Thursday, September 01, 2005

கனவுகள் என்பது என்ன - என் பார்வையில்

ஒவ்வொரு நாளும் நாம் அறிந்தும் அறியாமலும்தெரிந்தும் தெரியாமலும் நமது ஐம்புலன் மூலமாக எவ்வளவோ செய்திகளைச் சேகரிக்கிறோம். ஒவ்வொரு இரவிலும் நாம் தூங்கும் பொழுது நமது மூளை (வேலை இல்லாத நாட்களில் sunday வீட்டை ஒழுங்கு படுத்துதல் போல) நாம் சேகரித்த செய்திகளை அது சம்பந்தப்பட்ட பழைய செய்தி சேமிக்கபட்ட நினைவு அறைகளிலோ அல்லது அதன் தொடர்புடைய பக்கத்து அறைகளிலோ நிரந்தர சேமிப்பாக மாற்றுகிறது. அத்துடன் பழைய செய்திக்கும் புதிய செய்திக்கும் சேர்ந்த இணை இழைகளை (Hyper link) குறிப்பேட்டு பகுதிகளில் எழுதி ஒரு மிகப்பெரிய இணையதள வலைப்பின்னல் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறது. ஒரு செய்தித்துணுக்கு எவ்வளவு இணைப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேடுதலில் வேகமாக கிடைக்கிறது (Google போல). ஆனால் இப்படி செய்திகளை அடுக்கும் வேளை நடக்கும் பொழுது தற்காலிகமாக இன்றைய செய்தியையும் கடந்த காலச்செய்தியையும் கலந்த ஒரு குழப்பமான ஒரு நினைவு (எக்கச்சக்கமான hyperlink உள்ள ஒரு வலைத்தளம் எப்படி நாம் புறப்பட்ட இடத்திலிருந்து சம்பந்தமில்லாத பல தகவல்களைத்தேடி சேகரித்து ஒரு கலவையான அறிவைப்பெறுகிறோமோ ) கனவாக பரிணமிக்கிறது என்பதே என் எண்ணம்.