Friday, August 26, 2005

இந்து மதத்தில் அறிவியல் (2)- சோதனைக்குழாய் குழந்தை

மகா பாரதத்திலிருந்து -குந்திக்கு தருமர் பிறந்த செய்தி கேட்ட காந்தாரி தனக்கு இன்னும் குழந்தை பிறக்காததால் கோபமுற்று தன் கருவினை சுவற்றில் முட்டி ப்ரசவத்தை துரிதப்படுத்தினாள். ஆனால் பிறந்த்ததோ ஒரு பெரும் சதைப்பிண்டம். அதனால் வேதனையுற்ற காந்தாரி முனிவர் வியாசரிடம்வேண்ட அவர் அந்த சதைப்பிண்டத்தை 100 பங்காக பிரித்து 100 குடங்களில் இட்டார். பின் எஞ்சிய ஒரு பகுதியை மற்றொரு குடத்திலிட்டார். அந்தக்குடங்களில் இருந்து துரியோதனனும் அவனுடைய 99 சகோதரர்களும் ஒரு சகோதரி (துஷ்சலா)யும் பிறந்ந்தனர்.

இதில் வ்யாசர் செய்தது சோதனைக்குழாய் குழந்தை அல்லது க்ளோனிங் வகையை நினைவு படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது

Friday, August 05, 2005

இந்து மதத்தில் அறிவியல் (1)- பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி விஷ்ணுவின் தசாவதாரம் மூலமாக கோடிட்டு காட்டப்படுகிறது.
1.மச்சாவதாரம் (மீன்-நீர் வாழ் உயிரினம்)
2.கூர்மாவதாரம் (ஆமை - நீர் நிலம் வாழ் உயிரினம்)
3.வராகவதாரம் (பன்றி - நிலம் வாழ் உயிரினம்)
4.நரசிம்மவதாரம் (மனித - மிருக கலப்பு இனம்)
5.வாமனாவதாரம் (வளர்ச்சி அடையாத மனித இனம்)
6.பரசுராமவதாரம் (வளர்ச்சி அடைந்த ஆனால் கோபம் கட்டுபடுத்த தெரியாத மனித இனம்)7.ராமவதாரம் (மன பக்குவமடைந்த மனிதன்)
8.பலராமவதாரம் (க்ருஷ்ணரின் அண்ணன்)
9.க்ருஷ்ணாவதாரம் (இயற்கையை வெற்றி கொண்ட மனிதன் - சூரியனை மறைத்தல் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் - ஜராசந்தன் வதம் -மற்றும் பல மாயா ஜாலங்கள்)
10. கல்கி அவதாரம் - (Qiyamah in Islam - Judgement day in Christianity etc)