Tuesday, May 27, 2008

காலமானார் என்ற சொல்லை பற்றி

இது நாள் வரை காலமானார் என்ற சொல் இறந்தார் என்ற பொருளில் மட்டுமே உணர்ந்திருந்தேன். நேற்று திடீரென்று ஒரு சிந்தனை. ஒரு மனிதன் உயிருடன் வாழும் பொழுது இடம் மற்றும் நேரம் இரண்டின் தொகுப்பில் தான் அவரை உணர முடியும். யார் supersubra என்றால் இதோ இந்த ஊரில் இந்த இடத்தில் இருப்பார் அவர்தான் என்று சொல்லமுடியும். ஆனால் ஒருவர் காலமானார் என்றால் அவர் காலமாக மாறிவிட்டார். நேரம் இடம் என்ற இரண்டு பரிமாணங்களில் உணரப்பட்ட அவர் இப்பொழுது காலத்துடன் ஒன்றி விட்டார். ஒரு பரிமாணமாக மாறிவிட்டார். He became time என்பதுதான் என் மனதில் தோன்றிய எண்ணம்.

Friday, May 05, 2006

புது கிரக கண்டு பிடிப்பு - ஜோதிடத்தின் பலன் மாறாது -ஏன்

ஜோதிடம் உண்மையா பொய்யா என்பது தனி விவாதம்.

வாஸ்து சோதிடம் என்று எந்த ஒரு கலையையும் அழிக்க வேண்டாம்.

இன்று நமக்கு புரியவில்லை என்பதாலோ அல்லது ஏமாற்றும் எத்தர் அதிகம்

இருப்பதாலோ அதை முழுமையாய் உணரும் வரை அதை அழிக்காமல்

பாதுகாப்போம்.

ஜோதிடம் உண்மையா பொய்யா என்பது தனி விவாதம். ஆனால் அதன்

கணித முறையில் பிழை இல்லை. இன்னும் எத்தனை கோள்கள் கண்டு

பிடிக்கபட்டாலும் அது சூரியனை சுற்றும் காலத்தை கொண்டே அதன்

பலாபலன் கணிக்கப்படுகிறது. ஒரு சராசரி மானிட வயதுக்குள் சூரியனை

ஒரு முழு சுற்று சுற்றிவரும் கிரகங்கள்தான் மனித வாழ்க்கையில் மாறுதல்

ஏற்படுத்தும் என்பது கணக்கு. உதாரணம் சனி (30 வருடத்திற்கு

ஒருமுறை) வியாழன் (12 வருடத்திற்கு ஒருமுறை).


1. ஜாதகக்கணிப்பில் சந்திரனுக்கு ஒரு முக்கிய இடம்

கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரன் மற்ற கோள்கள் போலன்றி அது

ஒரு துணைக்கோளாக இருக்கும்போதும் எப்படி அதுவும் ஒரு கோளாக

எடுத்துக்கொள்ளப்படுகிறது?

ஜாதகத்தை பொருத்த வரை அதில் உள்ள கோள் என்று சொல்லப்படுவது

Planet என்னும் பொருளில் எடுக்கவேண்டாம். அது தரும் பலன்

பொருத்தே அதில் சேர்க்கபட்டுள்ளது. நீங்கள் அரசியல் பொருளாதார

தன்மை நிலைபெற்ற நாட்டில் வசித்தாலும் உங்கள் பக்கத்து வீட்டுக்கரானோ

அல்லது உங்கள் தெருவையே சுற்றி வரும் ஒரு சமூகசேவகராலோ அல்லது

ஒரு ரெளடி
யாலோ நீங்கள் இன்பமோ துன்பமோ அடையலாம் அல்லவா அது

போலத்தான் சந்திரனின் பலனும்.

ஆனால் புளுட்டோ போன்ற தூரத்து கிரகங்கள் ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு

வரை ஒரே கட்டத்தில் இருப்பதால் அதன் பலன் நிரந்தரம் மாறாதது.

அதைப்பற்றி யோசித்து பலன் இல்லை.


தூரக்கணக்கை எடுப்பதில்லை சூரியனை சுற்றும் காலத்தையே

எடுதுக்கொள்கின்றனர். மேலும் சந்திரன் 28 நாளுக்கு ஒரு முறை பூமியை

சுற்றிவருவதால் அதன் நிலைப்பாடு தினப்பலன் கூறுவதற்கும் சூரியன்

ஒவ்வொரு ராசியின் பார்வையிலிருந்து மாதம் ஒரு முறைதான் இடம்

மாறுவதால் அதை மாத பலன் கூறுவதற்கும் உபயோகபடுத்துகிறார்கள்.

நான் ஜோசியத்தின் தரம் பற்றி விவாதிக்க வில்லை. ஆனால் நமக்கு

புரியாத அல்லது விளக்க முடியாத எல்லாமே ஏமாற்று வேலை என்பது

தவறான அணுகுமுறை.

சமீபத்தில் டோண்டு அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி பற்றி தமிழ் மணத்தில்

வந்ததால் இதையும் கூறுகிறேன். 60 என்பது வியாழன் சனி கிரகங்கள்

சூரியனை சுற்றி வரும் வருடங்களின் 12, 30 (LCM) 60. என்

கணக்குப்படி 58ம் வருடமோ அல்லது 59ம் வருடமோ ஒரு குறிப்பிட்ட

நாளில் கணிக்கப்படும் ஜாதக்ம் அவர் பிறந்த போது இருந்த ஜாதகத்துடன்

ஒத்துபோகும் என்று நினைக்கிறேன். இது ஒரு home coming போல.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு எதிர் விளைவு உண்டு. நான் முன்

குறிப்பிட்ட ஒரு ரெளடியின் தொந்தரவை ச்மாளிக்க நீங்கள் ஒரு போலீசின்

துணை நாடலாம் அல்லது வேறு இடத்திற்கு குடி பெயரலாம்.

Friday, March 31, 2006

மறு பிறவி பற்றி என்னுடைய கருத்து

முழு பிரபஞ்ச ஆன்மாக்களும் சேர்ந்த ஒரு பரமாத்மாவை ஒரு பெரிய கடலுக்கு ஒப்பிடுவோம். அதிலிருந்து ஒரு பாத்திரம் (உடல்) மூலம் சிறிது நீர் எடுப்போம் (பிறவி). பின் அந்த பிறவியின் கர்மத்தை பொருத்து அந்த நீரின் நிறம் (ஆன்மாவின் வாசனை) மாறுகிறது. இப்பொழுது அந்த நீரை மீண்டும் அந்த பரமாத்மாவான கடலில் கொட்டுவோம் (இறந்து படுவோம்). இப்பொழுது அந்த பாத்திரத்தின் நீர் அந்த பரமாத்மாவின் தன்மையுடன் ஒன்றி விடுகிறது. (ஆனால் அது ஒன்றும் முன்னால்) ஒரு சிறிய பாத்திரத்தில் உள்ள சிவப்பு நிற திரவத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள தெளிந்த நீரின் மேல் கொட்டுவோம். அந்த கொட்டிய நீர் கலக்கும் முன்னால் வெகு வேகமாக அது வீழ்ந்த இடத்தில் இருக்கும் நீரை வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் (புது உடலில்) பிடித்தால் அந்த நீர் ஓரளவு பழைய சிவப்பு நிறத்தின் சாயல் இருக்கும். அது போல்தான் மறு பிறப்பு என்பது என் எண்ணம். இறந்த உடனடியாக மறு பிறப்பெடுத்தால் முன்பிறவி வாசனை இருக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிது காலம் கழித்து பிறந்தால் அது மற்றும் ஒரு புதிய பிறவி எனக் கொள்ளாமே தவிர அது மறுபிறப்பாகாது. மேலும் அந்தபிறவி பல்வேறு பிறவிகளின் ஒரு கலவையான பிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Sunday, March 05, 2006

ஜாதகம் - (பிறப்பேடு) என்பது என்ன

ஜாதகம் என்பது ஒருவரின் பிறந்த தேதி பற்றிய விவரக்குறிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை வெறும் சொற்களாலேயே குறிப்பிட முடியுமே அதற்கு எதற்காக ஒரு வரைபடம் அதில் கிரகங்களின் நிலை போன்ற விவரம்? உண்மையில் வரைபடமே மிகவும் முக்கியமானது. காலண்டர் எனும் நாட்காட்டி மனித சரித்திரத்தில் எத்தனையோ முறை மாற்றபட்டிருக்கிறது. உலகில் எத்தனையோ காலண்டர்கள் உள்ளன.ஆனால் ஜாதக வரைபடம் கிரக நிலைகளை பிறந்த ஊர், நேரம், இடம் இவற்றைச்சார்ந்த தாக எழுதப்படுகிறது. அதனால் எத்தனை ஆயிரம் வருடம் ஆனாலும் ஒருவரின் ஜாதக வரைபடம் மட்டும் இருந்தால் போதும். அவர் எத்தனை ஆண்டுகள் முன் பிறந்தார் எங்கு பிறந்தார் என்ன நேரத்தில் பிறந்தார் என்பதை எள்ளளவும் பிழையின்றி கண்டுபிடிக்க முடியும். இப்படி ஓர் அற்புதமான முறையைக் கண்டு பிடித்த முன்னோர்களின் அறிவைப்பாராட்டுவோம்.

சோதிடம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால் ஜாதகம் என்பது Carbon Dating போல ஒரு அறிவியல் அற்புதம்

Monday, February 27, 2006

டெலி விஷத்திற்கு மருந்து

சமீபத்தில்
மதி கந்தசாமி
அவர்களின் பதிவை பார்த்த பிறகு எழுந்த எண்ண அலைகள்

இது WORLD SPACE க்கான விளம்பரப்பதிவல்ல. ஆனால் நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் எண்ணத்தில் எழுதுகிறேன். கடந்த மூன்று வருடங்களாக என் வீட்டில் இரவில் யாரும் உன்னை அழித்துவிட்டுத்தான் மறு வேலை உன்னை நடுதெருவுக்கு கொண்டுவருவேன் என்றெல்லாம் சொல்வதில்லை. காரணம் WORLD SPACE RADIO.

24 மணி நேரமும் இடைவிடாத (FM Radio போல்)அனாவசியமான பிதற்றல்கள் அற்ற இசை மழை. தொலைக்காட்சி என்னும் தொல்லைக்காட்சியிலிருந்து தப்பிக்க ஒரே வழி.
மேல் விவரத்திற்கு
http://www.worldspaceasia.com/

Wednesday, February 22, 2006

இந்தியா எனும் அதிசயம்

இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு கல்வித்திரைப்படம் ஐ மேக்ஸ் முறையில் வெளி வந்திருப்பதாக தெரிகிறது. இதைப்பார்த்தவர்கள் யாராவது கருத்து தெரிவித்தால் நல்லது.

http://www.mysticindia.com/
http://www.imax.com/ImaxWeb/welcome.do

Tuesday, February 21, 2006

பிறரை அழவிட ஆசையா ?

நீ இறந்த பிறகு அதிக மனிதர்கள் அழ வேண்டுமா
நீ வாழும்பொழுது அதிக மனிதர்களை சிரிக்கவை (மகிழ்ச்சியை கொடு)

இன்றைய என் எண்ணம்